Tuesday 18 October 2016

TNPSC Group 4 GK Questions

# ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் – 0
# ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் – காஞ்சிபுரம்


# பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் – சென்னை
# ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு – 1919
# கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு – 1887
# கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு – 19ம் நூற்றாண்டு
# ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் – லிட்டில்வுட்
# ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் – ஹார்டி
# ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் – ஈ.டி.பெல்
# மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை – அரை மாத்திரை
# ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு – மாத்திரை என்னும் பெயர்
# திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
# தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
# ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது – முன்னிலை இடம்
# இடம் எத்தனை வகைப்படும் – 3 வகை
# மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு – இடம் என்று பெயர்
# ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் – பன்மை
# பல பொருள்களை குறிக்கும் சொல் – பலவின்பால்
# பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது – பலர்பால்
# ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை – உயர்திணைக்கு உரியவை
# எண் எத்தனை வகைப்படும் – இரண்டு
# ஒரே பொருளை குறிக்கும் சொல் – ஒருமை
# மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு – உயர்திணை
# அளபெடை எத்தனை வகைப்படும் – 2 வகை
# செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்
# திணை என்பது – ஒழுக்கம்
# சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து – ஏ
# சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து – ஏ
# சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் – ஆ, ஓ, ஏ
# சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் – எ, யா, ஏ
# வினா எழுத்துக்கள் – 5
# சுட்டெழுத்துக்கள் – 3
# பால் – 5
# பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
# ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது – சுட்டு
# பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்
# திணை – 2 வகை
# நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
# ஒரு பெண்ணைப் பார்த்து “மான் கொல்? மயில் கொல்?” என்பது – செய்யுள் வழக்கு

No comments:

Post a Comment