தமிழகத்தில் 5 பேருந்து நிலையங்களில் அம்மா ‘வைஃபை’ மண்டலம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை மெரினா கடற்கரை மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் அம்மா வைஃபை (Wi-Fi) மண்டலங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம், திருச்சி மத்திய பேருந்து நிலையங்கள், மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வைஃபை மண்டலங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.அம்மா வைஃபை மண்டலங்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 20 நிமிடங்கள் வரை இணைய சேவை வசதி இலவசமாக வழங்கப்படும். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசியசெய்திகள்
ரயில்களில்விற்கப்படும்உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டிவரி
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம் மற்றும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். ரயில்களில் விறகப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும் ஒரே அளவில் ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
114 போர்விமானங்களைவாங்கவிமானப் படைமுடிவு
இந்திய விமானப்படையில் பலவிதமான போர் விமானங்கள் உள்ளன. விமானப் படையின் போர்த் திறனை அதிகரிக்க கூடுதல் போர் விமானங்களை வாங்க விமானப் படை முடிவு செய்துள்ளது. வெளிநாட்டிலுள்ள விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன், இந்திய விமான நிறுவனம் இணைந்து போர் விமானங்களை உருவாக்கும் வகையில் 114 போர் விமானங்கள் வாங்கப்படும். இதற்கான உலக அளவிலான டெண்டரை விமானப் படை கோரியுள்ளது. போர் விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், சில விமானங்கள் பழையதாகி விட்டதாலும் புதிய விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்வதார்கிரஹ்திட்டம் (சொந்தமாகஒருவீடு)
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சொந்தமாக ஒரு வீடு என பொருள்படும் ஸ்வதார் கிரஹ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி மிகச் கடுமையாக சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கண்ணியத்துடன் வாழ வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி தங்குவதற்கு இடம், உணவு, உடை, மருத்துவ வசதி போன்றவற்றுடன் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
சர்வதேசியசெய்திகள்
தென் கொரியாவில் முன்னாள் பெண் அதிபருக்கு 24 ஆண்டு சிறை
ஊழல் புகாரில் சிக்கிய தென் கொரிய முன்னாள் பெண் அதிபருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன் ஹை கடந்த 2013-ம் ஆண்டு(66) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென் கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் சங் ஹீயின் மகள். மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பார்க், அதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பல ஊழல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.குறிப்பாக அரசு கொள்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பார்க் கியூன் ஹைக்கு உடந்தையாக அவருடைய நெருங்கிய தோழி சோய் சூன் சில் என்பவர் செயல்பட்டுள்ளார்.
பிரேசில் முன்னாள் அதிபருக்கு சிறை
பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை (72) சிறையில் அடைக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் லுலாவுக்கு ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை அன்பளிப்பாக அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் லுலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் அவரின் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
வணிகசெய்திகள்
ரிசர்வ் வங்கி :நோட்டு அச்சடிக்கும் செலவை குறைக்க மின்னணு கரன்சி வெளியிட திட்டம்
பிட்காயின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி, புதிதாக மின்னணு கரன்சிகளை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு, வரும் ஜூன் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. இது சூதாட்டம் போன்றே கருதப்படுகிறது. இதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மக்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர். பிட்காயின் பரிவர்த்தனை செய்த சில வங்கி கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிட்காயின் குறித்து வங்கிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது..
விளையாட்டுசெய்திகள்
காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் – சஞ்ஜிதா சானு
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளில் பளுதூக்குதல் போட்டியின், 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் 2018: ஆடவர் 69 பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் தீபக் லோதர் வெண்கல பதக்கம் வென்றார். ஆஸ்திரேலிய காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment